Nov 14, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா வெற்றிக்கு BN–PN கூட்டணியின் திட்டமிட்ட ஒத்துழைப்பே காரணம் – தக்கியுடின்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா வெற்றிக்கு BN–PN கூட்டணியின் திட்டமிட்ட ஒத்துழைப்பே காரணம் – தக்கியுடின்

மலாக்கா மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி பெற்ற வெற்றிக்கு இரு தரப்பினருக்கும் இடையிலான திட்டமிட்ட மற்றும் கட்டமைக்கப்பட்ட ஒத்துழைப்பே முக்கியக் காரணம் என பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.

இத்தேர்தலில் இரு கூட்டணிகளும் மத்திய, மாநில அளவுகளில் ஒருங்கிணைப்புக் குழுக்களை அமைத்து தேர்தல் பணிகளை முன்னெடுத்ததாக அவர் கூறினார்.

மேலும், இரு தரப்பினரும் இணைந்து தேர்தல் கொள்கை அறிக்கையையும் வெளியிட்டது அரசியல் புரிந்துணர்வை வலுப்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.

தேர்தல் முடிவுகளில் நீல நிறம் பெரும்பாலான தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தியதையும், பக்காத்தான் ஹராப்பான் நான்கு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதையும் சுட்டிக் காட்டிய அவர், பாரிசான் நேஷனல், பெரிக்காத்தான் நேஷனல் ஒத்துழைப்பு சிறந்த வெற்றிச் சூத்திரம் என வர்ணித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா சட்டமன்றத் தேர்தல்:  மாநில அரசை அமைப்பதாக பாரிசான் நேஷனல் – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அறிவிப்பு

மலாக்கா சட்டமன்றத் தேர்தல்: மாநில அரசை அமைப்பதாக பாரிசான் நேஷனல் – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அறிவிப்பு

மலாக்கா தேர்தல் தொடர்பாக 32 விசாரணைக் கோப்புகள் சட்டத்துறைத் தலைவரிடம் ஒப்படைப்பு

மலாக்கா தேர்தல் தொடர்பாக 32 விசாரணைக் கோப்புகள் சட்டத்துறைத் தலைவரிடம் ஒப்படைப்பு

மலாக்கா தேர்தலை நேரில் பார்வையிட்ட 10 ஆசிய நாடுகளின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மலாக்கா தேர்தலை நேரில் பார்வையிட்ட 10 ஆசிய நாடுகளின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

திருமணக் கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதி – அடையாள அட்டையை மறந்து திரும்பிச் சென்ற பரபரப்பு

திருமணக் கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதி – அடையாள அட்டையை மறந்து திரும்பிச் சென்ற பரபரப்பு

போலி வாட்ஸ்அப் தகவலால் வாக்களிக்க முடியாமல் தவித்த பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்

போலி வாட்ஸ்அப் தகவலால் வாக்களிக்க முடியாமல் தவித்த பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்

மலாக்கா தேர்தல் – பிற்பகல் 2 மணி நிலவரப்படி 52.15 விழுக்காடு வாக்குப்பதிவு

மலாக்கா தேர்தல் – பிற்பகல் 2 மணி நிலவரப்படி 52.15 விழுக்காடு வாக்குப்பதிவு