நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக பாரிசான் நேஷனல் பொதுச் செயலாளர் ஸம்ரி அப்துல் காடீர் தெரிவித்துள்ளார்.
நேற்று நவம்பர் 16-ஆம் தேதி, இஸ்மாயில் லாசிம் எழுதிய தனது ராஜினாமா கடிதத்தின் நகலை, பாரிசான் மற்றும் அம்னோ தலைவருமான டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்தக் கடிதமானது நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு, மாநிலத்தில் அரசியல் நிலைத்தன்மையை மீண்டும் ஏற்படுத்தவும், மாநில நிர்வாகம் சீராகச் செயல்படுவதை உறுதி செய்யவும் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என பாரிசான் நேஷனல் கூட்டணி நம்புவதாக ஸம்ரி தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்மாயில் லாசிமின் முடிவை மதிப்பதாகவும், நெகிரி செம்பிலான் மந்திரி பெசாராக அவர் ஆற்றிய சேவைகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








