Nov 16, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா தேர்தல் தோல்வி - புதிய வியூகத்தை அமைக்கிறது பெர்சாத்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா தேர்தல் தோல்வி - புதிய வியூகத்தை அமைக்கிறது பெர்சாத்து

மலாக்கா மாநிலத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, மலாய் - முஸ்லிம் மக்களின் ஆதரவைத் தேர்தல் வெற்றியாக மாற்றுவதற்கு பெர்சாத்து கட்சி உடனடியாகப் புதிய வியூகத்தை வகுக்க வேண்டும் என அக்கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ துன் ஃபைசால் இஸ்மாயில் அஸிஸ் தெரிவித்துள்ளார்.

மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் நிர்வாக இயந்திரங்களின் ஆதரவு இல்லாமல் போட்டியிட்டிருந்தாலும், பெர்சாத்து கட்சி அரசியல் ரீதியாகத் தொடர்ந்து செயல்படக்கூடிய நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, மலாக்கா தேர்தலில் பெர்சாத்து போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலும் தோல்வியடைந்தது.

இருப்பினும், பாரிசான் நேஷனல் கட்சியுடன் நேரடிப் போட்டி நிலவிய பந்தாய் குண்டுர், லெண்டு தொகுதிகளில் வைப்புத் தொகையைத் தக்க வைத்துக் கொண்டது.

அதேவேளையில் பலமுனைப் போட்டி நிலவிய பெம்பான் மற்றும் சுங்கை ஊடாங் தொகுதிகளில் வைப்புத் தொகையை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்றாலும், அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாக ஃபைசால் இஸ்மாயில் அஸிஸ் குறிப்பிட்டுள்ளார்.

தனது சொந்தச் சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்த பின்னரும், இந்த நான்கு தொகுதிகளில் கிடைத்த வாக்குகள் அடிமட்ட மக்களின் ஆதரவை வெளிப்படுத்துவதாக ஃபைசால் இஸ்மாயில் அஸிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
16-வது பொதுத் தேர்தலிலும் பெரிக்காத்தான் - பாரிசான் கூட்டணி தொடர வேண்டும்: சனூசி நோர்

16-வது பொதுத் தேர்தலிலும் பெரிக்காத்தான் - பாரிசான் கூட்டணி தொடர வேண்டும்: சனூசி நோர்

பெஜுவாங் கட்சி பொதுப் பேரவையில் மகாதீர் பங்கேற்பு - பெரிக்காத்தான் தலைவர்களைச் சந்தித்தார்

பெஜுவாங் கட்சி பொதுப் பேரவையில் மகாதீர் பங்கேற்பு - பெரிக்காத்தான் தலைவர்களைச் சந்தித்தார்

சரவாக் மாநிலத் தேர்தலில் பாரிசான் போட்டியிடாது - ஸாஹிட் திட்டவட்டம்

சரவாக் மாநிலத் தேர்தலில் பாரிசான் போட்டியிடாது - ஸாஹிட் திட்டவட்டம்

மலாக்கா தேர்தல் பின்னடைவு: தேர்தல் செயல்பாடுகளை மறுஆய்வு செய்ய பிகேஆர் முடிவு

மலாக்கா தேர்தல் பின்னடைவு: தேர்தல் செயல்பாடுகளை மறுஆய்வு செய்ய பிகேஆர் முடிவு

அடுத்த பொதுத்தேர்தலில் பிபிபி கட்சி வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் - ஸாஹிட் உறுதி

அடுத்த பொதுத்தேர்தலில் பிபிபி கட்சி வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் - ஸாஹிட் உறுதி

அடுத்த பொதுத்தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும் - ஜோகூர் ஜசெகவுக்கு தியோ நீ சிங் வலியுறுத்து

அடுத்த பொதுத்தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும் - ஜோகூர் ஜசெகவுக்கு தியோ நீ சிங் வலியுறுத்து