நெகிரி செம்பிலானின் மந்திரி பெசார் பதவிக்கு பாரிசான் நேஷனல் சார்பில் ஒரே ஒரு பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.
அந்தப் பெயர் அடங்கிய கடிதம் நேற்று யாங் டிபெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் முனாவிருக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
முன்மொழியப்பட்ட நபரை நியமிப்பது தொடர்பான இறுதி முடிவை மாநில ஆட்சியாளரும், அரண்மனையும் தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், பதவி விலகிய டத்தோ இஸ்மாயில் லாசிமுக்குப் பதிலாக புதிய முதலமைச்சரை நியமிப்பது குறித்து அரண்மனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. நேற்று கடிதம் கிடைத்திருந்தாலும், அதன் விவரங்களைச் சரிபார்த்து வருவதாக அரண்மனை தெரிவித்துள்ளது.








