Nov 18, 2026
Thisaigal NewsYouTube

மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் ராஜினாமா: வழக்கைத் திரும்பப் பெற்ற 10 முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர்கள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் ராஜினாமா: வழக்கைத் திரும்பப் பெற்ற 10 முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர்கள்

நெகிரி செம்பிலான் மாநிலத்தில், பதவி நீக்கம் செய்யப்பட்ட 10 மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும் தங்களது நியமனங்கள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்திருந்த சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

மாநில மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் பதவி விலகியதாக நேற்று வெளியான தகவலைத் தொடர்ந்து, அந்த 10 பேரும் தங்களது வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், 10 பேரும் வழக்கை திரும்பப் பெற்றதன் காரணமாக, வழக்குச் செலவாக 48 ஆயிரம் ரிங்கிட்டை எதிர்தரப்பினருக்கு வழங்க வேண்டுமென சிரம்பான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேவேளையில் நீதிபதி ரோஸ் மாவார் ரொஸாயின், இந்த வழக்கை மீண்டும் தொடர அனுமதியின்றி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வழக்குத் தொடர்ந்த 10 ஆட்சிக் குழு உறுப்பினர்களும், மாநிலச் செயலாளர் ஸாஃபிர் இப்ராஹிம் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்திற்கு தலா 20 ஆயிரம் ரிங்கிட் வழங்க வேண்டும் என்றும், டிகேயு எனப்படும் டேவான் கெஅடிலான் டான் உண்டாங் அமைப்புக்கு கூடுதலாக 8,000 ஆயிரம் ரிங்கிட் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: இஸ்மாயில் லாசிமைச் சந்தித்த ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் – பதவி விலகலுக்கு இன்னும் அரச ஒப்புதல் தேவை!

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: இஸ்மாயில் லாசிமைச் சந்தித்த ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் – பதவி விலகலுக்கு இன்னும் அரச ஒப்புதல் தேவை!

மந்திரி பெசார் பதவி விலகியதாக வெளியான அறிவிப்பு – மகன் நைம் இஸ்மாயில் கேள்வி

மந்திரி பெசார் பதவி விலகியதாக வெளியான அறிவிப்பு – மகன் நைம் இஸ்மாயில் கேள்வி

நெகிரி செம்பிலான் புதிய முதலமைச்சர் பதவிக்கு ஒரே ஒரு பெயர்; அரண்மனையின் முடிவுக்குக் காத்திருக்கும் அஹ்மாட் ஸாஹிட்

நெகிரி செம்பிலான் புதிய முதலமைச்சர் பதவிக்கு ஒரே ஒரு பெயர்; அரண்மனையின் முடிவுக்குக் காத்திருக்கும் அஹ்மாட் ஸாஹிட்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் ராஜினாமா கடிதம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை - அரண்மனை தகவல்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் ராஜினாமா கடிதம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை - அரண்மனை தகவல்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் பதவி விலகினார்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் பதவி விலகினார்

பகாங், பேராக் மாநிலத் தேர்தலை அவசரமாக நடத்த BN விரும்பவில்லை – ஸாஹிட்

பகாங், பேராக் மாநிலத் தேர்தலை அவசரமாக நடத்த BN விரும்பவில்லை – ஸாஹிட்