Nov 20, 2026
Thisaigal NewsYouTube

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவியில் நீடிக்க பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும்: அரண்மனை அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவியில் நீடிக்க பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும்: அரண்மனை அறிவிப்பு

நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம், அப்பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும் என மாநில அரண்மனை தெரிவித்துள்ளது.

மேலும், மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரின் பரிசீலனைக்காக, புதிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பட்டியலையும் இஸ்மாயில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம் பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பிக்கவில்லை என்றும், அதனை அரண்மனைக்கு அனுப்ப ஒப்புதல் வழங்கவில்லை என்றும் இஸ்மாயில் லாசிம் தெரிவித்துள்ளதாக அரண்மனை குறிப்பிட்டுள்ளது.

எனவே, அவர் பதவியில் நீடிக்க வேண்டும் என ஆட்சியாளர் விரும்புவதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்றும் விளக்கமளித்துள்ளது.

முன்னதாக, கடந்த நவம்பர் 16ஆம் தேதி இஸ்மாயில் லாசிம் பதவி விலகியதாக பாரிசான் நேஷனல் அறிவித்திருந்தது. எனினும், அந்தக் கடிதத்தின் உண்மைத்தன்மையை அரண்மனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில், மாநில நிர்வாகத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் இஸ்மாயில் லாசிம் தனது பொறுப்புகளைத் தொடர்ந்து ஆற்றுமாறு ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
இளம் மலாய் வாக்காளர்களை மீண்டும் கவர ஹராப்பானுக்கு வாய்ப்பு

இளம் மலாய் வாக்காளர்களை மீண்டும் கவர ஹராப்பானுக்கு வாய்ப்பு

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவி விலகல் சர்ச்சை: மாநில ஆட்சியாளரை அம்னோ ஏமாற்ற முயன்றதா? – ஜசெக தலைவர் கேள்வி

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவி விலகல் சர்ச்சை: மாநில ஆட்சியாளரை அம்னோ ஏமாற்ற முயன்றதா? – ஜசெக தலைவர் கேள்வி

நெகிரி செம்பிலான் மாநில அரசியல் சர்ச்சையில் புதிய திருப்பம்: மந்திரி பெசாராக இஸ்மாயில் லாசிம் நீடிக்க ஆட்சியாளர் உத்தரவு

நெகிரி செம்பிலான் மாநில அரசியல் சர்ச்சையில் புதிய திருப்பம்: மந்திரி பெசாராக இஸ்மாயில் லாசிம் நீடிக்க ஆட்சியாளர் உத்தரவு

மலாக்கா மாநிலத்தின் புதிய ஆட்சிக்குழு பதவியேற்பு – 10 சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்பு

மலாக்கா மாநிலத்தின் புதிய ஆட்சிக்குழு பதவியேற்பு – 10 சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்பு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி – நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி – நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்

பதவி விலகல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: மந்திரி பெசாராகத் தொடர இஸ்மாயில் லாசிமுக்கு ஆட்சியாளர் உத்தரவு

பதவி விலகல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: மந்திரி பெசாராகத் தொடர இஸ்மாயில் லாசிமுக்கு ஆட்சியாளர் உத்தரவு