மலாக்கா மாநிலத்தின் புதிய ஆட்சிக்குழுவில் இடம்பெற்றுள்ள 10 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
ஆயர் கெரோவில் உள்ள ஸ்ரீ நெகிரி வளாகத்தில், மலாக்கா மாநில ஆளுநர் துன் அலி ருஸ்தாம் முன்னிலையில் இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அண்மையில் நடைபெற்ற மாநிலத் தேர்தலைத் தொடர்ந்து, புதிய மாநில நிர்வாகத்தை முழுமைப்படுத்தும் வகையில் இந்த நியமனங்கள் இடம் பெற்றுள்ளன.
புதிதாக அமைக்கப்பட்ட ஆட்சிக்குழுவில் ஏற்கெனவே பதவி வகித்த ஐந்து உறுப்பினர்கள் மீண்டும் தொடர்கின்றனர். மேலும் ஐந்து புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனலும், பெரிக்காத்தான் நேஷனலும் மொத்தமுள்ள 28 சட்டமன்றத் தொகுதிகளில் 24 இடங்களைக் கைப்பற்றி மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான பெரும்பான்மையைப் பெற்றன.
இதில் அம்னோ 18 இடங்களையும், மசீச இரண்டு இடங்களையும், மஇகா ஓர் இடத்தையும் வென்றன. பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் பாஸ் கட்சி இரண்டு இடங்களைக் கைப்பற்றியது.
பக்காத்தான் ஹராப்பான் நான்கு இடங்களை வென்றது. இவை அனைத்தும் ஜசெக.விற்கு கிடைத்த வெற்றிகளாகும்.








