Nov 21, 2026
Thisaigal NewsYouTube

பக்காத்தானுடன் சமரச முயற்சி: துருக்கி அதிபரின் அழைப்புக்கு ஹாடி அவாங் மறுப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பக்காத்தானுடன் சமரச முயற்சி: துருக்கி அதிபரின் அழைப்புக்கு ஹாடி அவாங் மறுப்பு

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியுடன், பாஸ் கட்சி மீண்டும் சமரசம் செய்து கொள்ள முடியுமா? என துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) தம்மிடம் நேரடியாகக் கேட்டதாக பாஸ் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் நடைபெற்ற இஸ்லாமிய அறிஞர்கள் மாநாட்டின் போது இந்த விவகாரம் குறித்து எர்டோகன் தம்மிடம் பேசியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பக்காத்தான் கூட்டணியுடன் தாம் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று எர்டோகனிடம் கூறிவிட்டதாக திரங்கானு மாநிலத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஸ் கட்சியின் 16ஆவது பொதுத்தேர்தலுக்கான, தேர்தல் பிரசாரக் குழு தொடக்க விழாவில் உரையாற்றிய ஹாடி அவாங் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் வெளிநாட்டுத் தலைவர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி பாஸ் கட்சியை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இணைக்க சில தரப்பினர் முயற்சி செய்ததாகவும் ஹாடி அவாங் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவியில் நீடிக்க பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும்: அரண்மனை அறிவிப்பு

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவியில் நீடிக்க பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும்: அரண்மனை அறிவிப்பு

இளம் மலாய் வாக்காளர்களை மீண்டும் கவர ஹராப்பானுக்கு வாய்ப்பு

இளம் மலாய் வாக்காளர்களை மீண்டும் கவர ஹராப்பானுக்கு வாய்ப்பு

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவி விலகல் சர்ச்சை: மாநில ஆட்சியாளரை அம்னோ ஏமாற்ற முயன்றதா? – ஜசெக தலைவர் கேள்வி

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவி விலகல் சர்ச்சை: மாநில ஆட்சியாளரை அம்னோ ஏமாற்ற முயன்றதா? – ஜசெக தலைவர் கேள்வி

நெகிரி செம்பிலான் மாநில அரசியல் சர்ச்சையில் புதிய திருப்பம்: மந்திரி பெசாராக இஸ்மாயில் லாசிம் நீடிக்க ஆட்சியாளர் உத்தரவு

நெகிரி செம்பிலான் மாநில அரசியல் சர்ச்சையில் புதிய திருப்பம்: மந்திரி பெசாராக இஸ்மாயில் லாசிம் நீடிக்க ஆட்சியாளர் உத்தரவு

மலாக்கா மாநிலத்தின் புதிய ஆட்சிக்குழு பதவியேற்பு – 10 சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்பு

மலாக்கா மாநிலத்தின் புதிய ஆட்சிக்குழு பதவியேற்பு – 10 சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்பு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி – நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி – நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்