Nov 22, 2026
Thisaigal NewsYouTube

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி ரத்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி ரத்து

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்கவிருந்த நிகழ்ச்சி இன்று நடைபெறவில்லை.

இன்று ஞாயிற்றுக்கிழமை இஸ்தானா ஸ்ரீ மெனாந்தியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அந்த நிகழ்ச்சி, புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படவிருந்த சிலர் கடைசி நேரத்தில் தங்களது முடிவை மாற்றிக் கொண்டு விலகியதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, மாநிலத்தின் புதிய நிர்வாகக் குழுவில் ஏழு புதிய உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் என்றும், இதற்கு முன்பு 10 உறுப்பினர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களின் நியமனம் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரின் ஒப்புதலுக்குப் பின்னர் விரைவில் மேற்கொள்ளப்படும் என மாநில மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

மாநில அரசியல் நெருக்கடிக்கு இன்னும் தீர்வு காணப்படாத நிலையில், புதிய ஆட்சிக்குழு அமைக்கும் நடவடிக்கையும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →