சிலாங்கூர் ஜசெக மாநாட்டில் அதிகமான இருக்கைகள் காலியாக இருந்ததைக் கண்டு, கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் இண்டர்நேஷனல் டிரேட் செண்டரில் இன்று நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய அந்தோணி லோக், வருகை தராத கிராமத் தலைவர்கள், நகராண்மைக்கழக உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு மாநிலத் தலைமையைக் கேட்டுக் கொண்டார்.
கட்சியில் பொறுப்புகளை ஏற்றவர்கள் அடிப்படைக் கடமைகளைக்கூட நிறைவேற்றத் தவறினால், அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், கட்சிக்கான அர்ப்பணிப்பையும் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தாதவர்கள், அவர்களின் செல்வாக்கு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பெறமாட்டார்கள் என்றும் அந்தோணி லோக் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.








