Nov 25, 2026
Thisaigal NewsYouTube

ஒற்றுமை அரசாங்கத்தில் இருக்கும் கட்சிகள் மாநிலத் தேர்தல்களில் மோதக் கூடாது - அந்தோணி லோக் கருத்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஒற்றுமை அரசாங்கத்தில் இருக்கும் கட்சிகள் மாநிலத் தேர்தல்களில் மோதக் கூடாது - அந்தோணி லோக் கருத்து

ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள், அரசாங்கத்துடன் இணைந்து ஒன்றாகச் செயல்பட்டுக் கொண்டே, மாநிலத் தேர்தல்களில் ஒன்றுக்கொன்று எதிராகப் போட்டியிடும் நிலையைத் தொடர முடியாது என ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வர்த்தக அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அஸிஸ் தொகுத்து வழங்கும் ‘Ngopi Dengan Zafrul’ பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இது குறித்து பேசிய அந்தோணி லோக், கடந்த 2022-ஆம் ஆண்டு ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டபோதே, இந்தப் பிரச்சினை குறித்து பகாத்தான் ஹராப்பான் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலுக்கு எச்சரிக்கை விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதற்கு முந்தைய டான் ஶ்ரீ முஹிடின் யாசின் மற்றும் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அரசாங்கங்கள், சபா, மலாக்கா மற்றும் ஜோகூர் மாநிலத் தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களால் சரிந்ததை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மத்திய அரசில் கூட்டணியாக இருக்கும் கட்சிகள் மாநிலத் தேர்தல்களில் பலமுனைப் போட்டியில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், இல்லையெனில் ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மை பாதிக்கப்படும் என்றும் அந்தோணி லோக் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
பேரா மாநில சட்டமன்றம் கலைக்கப்படுகிறதா? ஆருடத்தை மறுத்தார் மந்திரி பெசார்!

பேரா மாநில சட்டமன்றம் கலைக்கப்படுகிறதா? ஆருடத்தை மறுத்தார் மந்திரி பெசார்!

ஜசெக மாநாட்டில் காலி இருக்கைகள்! அதிருப்தியில் அந்தோணி லோக்; கட்சிப் பொறுப்பாளர்களுக்கு கடும் எச்சரிக்கை

ஜசெக மாநாட்டில் காலி இருக்கைகள்! அதிருப்தியில் அந்தோணி லோக்; கட்சிப் பொறுப்பாளர்களுக்கு கடும் எச்சரிக்கை

அடுத்த பொதுத்தேர்தலில் ராக்கெட் சின்னத்தில் போட்டியிட ஜசெக தயார்! லிம் குவான் எங் அறிவிப்பு

அடுத்த பொதுத்தேர்தலில் ராக்கெட் சின்னத்தில் போட்டியிட ஜசெக தயார்! லிம் குவான் எங் அறிவிப்பு

பக்காத்தான் ஹராப்பான் – அம்னோ அரசியல் ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்வீர் ராம்கர்பால் அதிரடி வலியுறுத்து

பக்காத்தான் ஹராப்பான் – அம்னோ அரசியல் ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்வீர் ராம்கர்பால் அதிரடி வலியுறுத்து

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி ரத்து

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி ரத்து

பிரதமர் அன்வாரை இன்னும் சந்திக்கவில்லை – அந்தோணி லோக்

பிரதமர் அன்வாரை இன்னும் சந்திக்கவில்லை – அந்தோணி லோக்