Nov 28, 2026
Thisaigal NewsYouTube

சரவாக் தேர்தலில் போட்டியின்றி வெற்றி: 11-ஆவது முறையாக சட்டமன்ற உறுப்பினரான அபாங் ஜொஹாரி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சரவாக் தேர்தலில் போட்டியின்றி வெற்றி: 11-ஆவது முறையாக சட்டமன்ற உறுப்பினரான அபாங் ஜொஹாரி

சரவாக் மாநிலத் தேர்தலில் கம்பூங்கான் பார்ட்டி சரவாக் தலைவர் அபாங் ஜொஹாரி ஓபேங் போட்டியின்றி வெற்றி பெற்று 11ஆவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின் போது கெடோங் தொகுதியில் அவரைத் தவிர வேறு யாரும் போட்டியிடாததால் இந்த வெற்றி உறுதியானது.

இதன் மூலம் அவர் இரண்டாவது முறையாக கெடாங் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

அபாங் ஜொஹாரி கடந்த 1981-ஆம் ஆண்டு சதோக் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார்.

அதனைத் தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டு மாநிலத் தேர்தல் வரை சதோக் தொகுதியைத் தக்கவைத்த அவர், அந்தத் தேர்தலில் கெடோங் தொகுதிக்கு மாறிப் போட்டியிட்டார்.

இதற்கிடையில், தனது அடுத்த பதவிக்காலமே கடைசியாக இருக்கும் என ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த அபாங் ஜொஹாரி, கட்சியில் தலைமைத்துவ மாற்றம் தவிர்க்க முடியாதது என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
சரவாக் மாநிலத் தேர்தல்: 82 வேட்புமனு மையங்களும் மூடப்பட்டன – 14 நாள் பிரசாரம் இன்று தொடக்கம்

சரவாக் மாநிலத் தேர்தல்: 82 வேட்புமனு மையங்களும் மூடப்பட்டன – 14 நாள் பிரசாரம் இன்று தொடக்கம்

சரவாக் மாநிலத் தேர்தலில் போட்டியிடாது பெரிக்காத்தான் நேஷனல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சரவாக் மாநிலத் தேர்தலில் போட்டியிடாது பெரிக்காத்தான் நேஷனல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உறுதிமொழியை மீறினால் உடனடியாகப் பதவி பறிபோகும்: நெகிரி செம்பிலான் ஆறு ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உறுதி

உறுதிமொழியை மீறினால் உடனடியாகப் பதவி பறிபோகும்: நெகிரி செம்பிலான் ஆறு ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உறுதி

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழுவில் 6 புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு: ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் முன்னிலையில் உறுதிமொழி

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழுவில் 6 புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு: ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் முன்னிலையில் உறுதிமொழி

முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தும் திட்டமில்லை! பிரதமர் அன்வார் திட்டவட்டம்

முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தும் திட்டமில்லை! பிரதமர் அன்வார் திட்டவட்டம்

ஒற்றுமை அரசாங்கத்தில் இருக்கும் கட்சிகள் மாநிலத் தேர்தல்களில் மோதக் கூடாது - அந்தோணி லோக் கருத்து

ஒற்றுமை அரசாங்கத்தில் இருக்கும் கட்சிகள் மாநிலத் தேர்தல்களில் மோதக் கூடாது - அந்தோணி லோக் கருத்து