நெகிரி செம்பிலானில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆறு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும், தங்களது உறுதிமொழியை மீறினால் உடனடியாகப் பதவி இழக்க நேரிடும் என உறுதி அளித்துள்ளனர்.
மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் மற்றும் அரச குடும்பத்தின் மீது விசுவாசமாக இருப்பதாகவும், மாநில அரசியலமைப்பின் இறையாண்மையைப் பாதுகாப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.
கோலா பிலா, இஸ்தானா பெசார் ஶ்ரீ மெனாந்தி அரண்மனையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் சுஹைமி அய்னி, ஸைடி அப்துல் காடிர், ரிட்ஸுவான் அஹ்மாட், அப்துல் ஃபாத்தா ஸாகாரியா, காய்யும் அப்துல் ஜாலில் மற்றும் கோ கிம் சுவீ ஆகியோர் இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
மேலும், டேவான் கெஅடிலான் டான் உண்டாங் அமைப்பின் அதிகாரத்தையும் அவர்கள் அங்கீகரித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் துவாங்கு அயிஷா ரொஹானி தெங்கு பெசார் மாஹ்மூட் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் மற்றும் மாநில மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.








