நெகிரி செம்பிலான் மாநிலத்தின் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களாக 6 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை அம்மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
இஸ்தானா பெசார் செஇ மெனாந்தி அரண்மனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் கலந்து கொண்டார்.
மேலும், பதவியேற்ற 6 பேரில் பாரிசான் நேஷனல் கூட்டணியைச் சேர்ந்த 4 பேரும், பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியைச் சேர்ந்த 2 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
அதன் படி, அம்னோ சார்பில் டத்தோ முஹமட் ஸைடி அப்துல் காடீர், முஹமட் காய்யும் அப்துல் ஜாலில், சுஹைமி அய்னி ஆகியோரும், மசீச கட்சி சார்பில் கோ கிம் சுவீயும் பதவியேற்றனர்.
அதேவேளையில் பெரிகாத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் வாவாசான் கட்சியின் ரிட்ஸுவான் அஹ்மாட் மற்றும் பாஸ் கட்சியின் அப்துல் ஃபாத்தா ஸாகாரியா ஆகியோர் பதவியேற்றனர்.
மேலும், இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் துவாங்கு அம்புவான் பெசார் துவாங்கு அயிஷா ரொஹானி தெங்கு பெசார் மஹ்மூட் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்கள், மாநிலத்தின் உண்டாங் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.








