Nov 29, 2026
Thisaigal NewsYouTube

மலாய்க்காரர் அல்லாதவர்களும் பாரிசானில் நேரடியாக உறுப்பினராகச் சேரலாம் - ஸாஹிட் ஹாமிடி அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாய்க்காரர் அல்லாதவர்களும் பாரிசானில் நேரடியாக உறுப்பினராகச் சேரலாம் - ஸாஹிட் ஹாமிடி அறிவிப்பு

மலேசியாவில் அனைத்து இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்களும், பாரிசான் நேஷனல் கூட்டணியின் எந்தவோர் உறுப்புக் கட்சியிலும் இணையாமல், நேரடியாக பாரிசான் உறுப்பினராகச் சேர விண்ணப்பிக்கலாம் என்று அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி அறிவித்துள்ளார்.

யுனிவெர்சிட்டி சுல்தான் ஸைனால் அபிடின் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற சாமா ஹாடிஸ் இஜ்திமாக் பொண்டோக் நுசாந்தாரா நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றிய ஸாஹிட், மலாய் சமூகத்தினர் அம்னோவில் இணையலாம் என்றும், சீனர் மற்றும் இந்திய சமூகத்தினர் உள்ளிட்ட மலாய்க்காரர் அல்லாதவர்களும், பாரிசானில் நேரடி உறுப்பினர்களாகச் சேர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், சபா, சரவாக் உள்ளிட்ட மலேசியாவின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்தவர்கள் இன, மத வேறுபாடின்றி இணையவழிப் பதிவு முறையின் மூலம் உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில் பிற இனத்தவர்களும் பாரிசான் உறுப்பினர்களாகச் சேருவதற்கு அதன் அரசியலமைப்பிலேயே ஏற்கெனவே இடமளிக்கப்பட்டுள்ளதாக அம்னோ தலைவருமான ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
16-வது பொதுத் தேர்தலுடன் பினாங்கு மாநிலத் தேர்தலை நடத்த ஜசெக திட்டம் – அந்தோணி லோக் தகவல்

16-வது பொதுத் தேர்தலுடன் பினாங்கு மாநிலத் தேர்தலை நடத்த ஜசெக திட்டம் – அந்தோணி லோக் தகவல்

பொதுத் தேர்தலில் ம.இ.கா. குறைந்தது 5 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும்: அஹ்மாட் ஸாஹிட் இலக்கு

பொதுத் தேர்தலில் ம.இ.கா. குறைந்தது 5 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும்: அஹ்மாட் ஸாஹிட் இலக்கு

சரவாக் மாநிலத் தேர்தல்: 82 வேட்புமனு மையங்களும் மூடப்பட்டன – 14 நாள் பிரசாரம் இன்று தொடக்கம்

சரவாக் மாநிலத் தேர்தல்: 82 வேட்புமனு மையங்களும் மூடப்பட்டன – 14 நாள் பிரசாரம் இன்று தொடக்கம்

சரவாக் தேர்தலில் போட்டியின்றி வெற்றி: 11-ஆவது முறையாக சட்டமன்ற உறுப்பினரான அபாங் ஜொஹாரி

சரவாக் தேர்தலில் போட்டியின்றி வெற்றி: 11-ஆவது முறையாக சட்டமன்ற உறுப்பினரான அபாங் ஜொஹாரி

சரவாக் மாநிலத் தேர்தலில் போட்டியிடாது பெரிக்காத்தான் நேஷனல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சரவாக் மாநிலத் தேர்தலில் போட்டியிடாது பெரிக்காத்தான் நேஷனல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உறுதிமொழியை மீறினால் உடனடியாகப் பதவி பறிபோகும்: நெகிரி செம்பிலான் ஆறு ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உறுதி

உறுதிமொழியை மீறினால் உடனடியாகப் பதவி பறிபோகும்: நெகிரி செம்பிலான் ஆறு ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உறுதி