பார்ட்டி பெர்சாமா மலேசியா கட்சியின் இணைத் தலைவரான நிக் நஸ்மி நிக் அஹ்மாட், கட்சியின் அதிகாரபூர்வ நடவடிக்கைகளில் பங்கேற்க மூன்று மாதங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை வரும் 20ஆம் தேதி தொடங்கி, 2027 ஜனவரி 19ஆம் தேதி வரை நீடிக்கும் என்று கட்சித் தலைவர் ஷுக்ரி ரஸாப் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், கட்சியின் நம்பகத்தன்மையையும் பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதுகாப்பது அவசியம் என்றார்.
இதற்கிடையே, நிக் நஸ்மி தமது மனைவி, குடும்பத்தினர், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் மன்னிப்புக் கோரியதுடன், சம்பந்தப்பட்ட சட்ட நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பதாகத் தெரிவித்துள்ளார்.








