Oct 12, 2026
Thisaigal NewsYouTube

மலாய் ஆட்சியாளர்கள் மாநாட்டில் துவாங்கு முஹ்ரிஸ் பங்கேற்கமாட்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாய் ஆட்சியாளர்கள் மாநாட்டில் துவாங்கு முஹ்ரிஸ் பங்கேற்கமாட்டார்

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர், நாளை தொடங்கும் மலாய் ஆட்சியாளர்கள் மாநாட்டில் பங்கேற்கமாட்டார் என்று நெகிரி செம்பிலான் அரண்மனை நிர்வாகக் கட்டுப்பாட்டாளர் அஸிஸி அலி தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் பங்கேற்க துவாங்கு முஹ்ரிஸுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்றும், மாநாட்டில் கலந்து கொள்ள அவருக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு தேவையில்லை என்றும் அஸிஸி கூறினார். குறிப்பாக, லுவாக் ஜெலெபுவின் உண்டாங் தொடர்பான விவகாரம் உள்ளிட்ட மாநிலப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்காக மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று துவாங்கு முஹ்ரிஸ் முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய நெகிரி செம்பிலான் அரச குடும்பச் சர்ச்சை ஆறு மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த மாநாடு நாளை முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →