Oct 20, 2026
Thisaigal NewsYouTube

2027 ஆகஸ்ட் மாதத்திற்குள் 16-வது பொதுத்தேர்தலை அன்வார் அறிவிப்பார்: எதிர்கட்சித் தலைவர் ஹம்ஸா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
2027 ஆகஸ்ட் மாதத்திற்குள் 16-வது பொதுத்தேர்தலை அன்வார் அறிவிப்பார்: எதிர்கட்சித் தலைவர் ஹம்ஸா

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 16-வது பொதுத்தேர்தலை அறிவிக்கலாம் எனக் மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஹம்ஸா ஸைனுடின் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

பக்காத்தான் ஹராப்பான் மற்றும் அம்னோ இடையே அரசியல் பதற்றம் அதிகரித்து வருவதால் விரைவில் இந்த சூழல் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பிஃஎப்எம் (BFM) வானொலி நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்த ஹம்ஸா, 2027-ஆம் ஆண்டு தொடங்கி சில மாதங்களுக்கு மேல் ஒற்றுமை அரசாங்கம் நீடிப்பது சாத்தியமில்லை எனக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக அமைதியாக இருந்த பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி மீதான நீதிமன்ற வழக்குகள் குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளதையும் ஹம்ஸா சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், கடந்த ஜனவரி மாதம், ஊழல், நம்பிக்கை மோசடி மற்றும் பணமோசடி தொடர்பாக சாஹிட் மீது சுமத்தப்பட்டிருந்த 47 குற்றச்சாட்டுகளில் மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம் என சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் முடிவு செய்தது.

இந்த முடிவுக்கு ஜசெக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கூட்டணி உடையும் அறிகுறிகள் தென்படுவதால், அதற்கு முன்பே அன்வார் தேர்தலை அறிவிக்க வேண்டியிருக்கும் என ஹம்ஸா தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பதிவு ரத்து - ஆர்ஓஎஸ் அதிரடி அறிவிப்பு

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பதிவு ரத்து - ஆர்ஓஎஸ் அதிரடி அறிவிப்பு

மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? தலைவர் மன்றமே முடிவெடுக்கும்-  ஃபாஹ்மி கூறுகிறார்

மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? தலைவர் மன்றமே முடிவெடுக்கும்- ஃபாஹ்மி கூறுகிறார்

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரம்: மந்திரி பெசார் உட்பட 17 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மனுத் தாக்கல்

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரம்: மந்திரி பெசார் உட்பட 17 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மனுத் தாக்கல்

மலாக்கா தேர்தலில் வாக்காளர் வருகையைப் பதிவு செய்ய புதிய தொழில்நுட்பம்: சோதனை முயற்சியில் தேர்தல் ஆணையம்

மலாக்கா தேர்தலில் வாக்காளர் வருகையைப் பதிவு செய்ய புதிய தொழில்நுட்பம்: சோதனை முயற்சியில் தேர்தல் ஆணையம்

உண்டி18, தானியங்கி வாக்காளர் பதிவு பாரிசானுக்கு சவாலாக இருக்கும்: மலாக்கா மந்திரி பெசார் கணிப்பு

உண்டி18, தானியங்கி வாக்காளர் பதிவு பாரிசானுக்கு சவாலாக இருக்கும்: மலாக்கா மந்திரி பெசார் கணிப்பு

மலாக்கா இளைஞர் பிரிவுத் தலைவர் ஜெஃப்ரி சஃப்ரி பெர்சாத்துவிலிருந்து விலகல்

மலாக்கா இளைஞர் பிரிவுத் தலைவர் ஜெஃப்ரி சஃப்ரி பெர்சாத்துவிலிருந்து விலகல்