Oct 21, 2026
Thisaigal NewsYouTube

பெரிக்காத்தான் நேஷனலின் புதிய அரசியல் வியூகம்: ஐபிஆர் மூலம் புத்துயிர் பெறும் வாய்ப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெரிக்காத்தான் நேஷனலின் புதிய அரசியல் வியூகம்: ஐபிஆர் மூலம் புத்துயிர் பெறும் வாய்ப்பு

பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஐபிஆர் எனப்படும் இகாத்தான் ஃபிரிஹாதின் ரக்யாட் என்ற புதிய கூட்டணியை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பெர்சாத்து கட்சியின் இணை நிறுவனர் ரெட்ஸுவான் யுசோஃப் தெரிவித்துள்ளார்.

பெரிக்காத்தான் நேஷனல் என்ற பெயர் தொடர்ந்து வலுவான அரசியல் அடையாளமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், புதிய தொலைநோக்குப் பார்வை மற்றும் மாறுபட்ட செயல்திட்டத்துடன் கூட்டணியை மீண்டும் உருவாக்கும் முயற்சியை பெர்சாத்து முன்னெடுக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட இகாத்தான் ஃபிரிஹாதின் ரக்யாட் எனப்படும் ஐபிஆர் கூட்டணியில் பெர்சாத்து, பாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இருப்பினும், அண்மைக்கால ஐபிஆர் கூட்டங்களில் பாஸ் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்காதது, அக்கட்சியின் தொடர்ச்சியான பங்களிப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதற்கிடையே, பெரிக்காத்தான் கூட்டணியின் பதிவை ரத்து செய்த மலேசியச் சங்கப் பதிவாளர் அலுவலகத்தின் முடிவை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த முடிவைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கக் கோரப்படும் என்றும் பெரிக்காத்தான் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புதிய கூட்டணி உருவாகுமா? அல்லது ஐபிஆர் மற்றும் பெரிக்காத்தான் இடையே தேர்தல் ஒப்பந்தம் ஏற்படுமா? என்பது தொடர்பான இறுதி முடிவு, பெர்சாத்து தலைமையும் மற்ற அரசியல் கட்சிகளும் நடத்தும் பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பாக்கார் ஹம்ஸா பெர்சாத்து கட்சியிலிருந்து இடைநீக்கம்

பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பாக்கார் ஹம்ஸா பெர்சாத்து கட்சியிலிருந்து இடைநீக்கம்

மலாக்கா தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கட்சிகள் பாஸ் சின்னத்தில் போட்டியிடலாம் – சனூசி

மலாக்கா தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கட்சிகள் பாஸ் சின்னத்தில் போட்டியிடலாம் – சனூசி

கூட்டணிக் கட்சிகளை நியாயமாக நடத்த வேண்டும்; பெரிக்காத்தான் நேஷனல் பதிவு ரத்து ஒரு பாடம் – முகைதீன்

கூட்டணிக் கட்சிகளை நியாயமாக நடத்த வேண்டும்; பெரிக்காத்தான் நேஷனல் பதிவு ரத்து ஒரு பாடம் – முகைதீன்

பெரிக்காத்தான் நேஷனல் மக்கள் ஆதரவு அலையை எளிதில் அணைக்க முடியாது – அஹ்மாட் சம்சூரி

பெரிக்காத்தான் நேஷனல் மக்கள் ஆதரவு அலையை எளிதில் அணைக்க முடியாது – அஹ்மாட் சம்சூரி

பாஸ் தலைமை மீதே பெரிக்காத்தான் பதிவுப் ரத்து பழியைச் சுமத்தும் பெர்சத்து

பாஸ் தலைமை மீதே பெரிக்காத்தான் பதிவுப் ரத்து பழியைச் சுமத்தும் பெர்சத்து

2027 ஆகஸ்ட் மாதத்திற்குள் 16-வது பொதுத்தேர்தலை அன்வார் அறிவிப்பார்: எதிர்கட்சித் தலைவர் ஹம்ஸா

2027 ஆகஸ்ட் மாதத்திற்குள் 16-வது பொதுத்தேர்தலை அன்வார் அறிவிப்பார்: எதிர்கட்சித் தலைவர் ஹம்ஸா