Oct 18, 2026
Thisaigal NewsYouTube

உண்டி18, தானியங்கி வாக்காளர் பதிவு பாரிசானுக்கு சவாலாக இருக்கும்: மலாக்கா மந்திரி பெசார் கணிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
உண்டி18, தானியங்கி வாக்காளர் பதிவு பாரிசானுக்கு சவாலாக இருக்கும்: மலாக்கா மந்திரி பெசார் கணிப்பு

மலாக்கா மாநிலத் தேர்தலில் தானியங்கி வாக்காளர் பதிவு முறையும், “உண்டி18” திட்டத்தின் கீழ் இளம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்களிக்கும் உரிமையும் பாரிசான் நேஷனல் கூட்டணிக்குச் சவாலாக அமையும் என அம்மாநில மந்திரி பெசார் அப்துல் ரவூஃப் யுசோ தெரிவித்துள்ளார்.

அலோர் காஜாவில் இன்று நடைபெற்ற பாரிசான் நேஷனல் தேர்தல் பணிக்குழு தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், புதிய வாக்காளர்களை அணுகுவதற்காக பாரிசான் நேஷனல் தனது தேர்தல் பணிக் குழுவைப் பலப்படுத்துவதுடன், பாரம்பரிய அணுகுமுறைகளைக் கடந்து புதிய உத்திகளையும் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் கட்சிக்கான ஆதரவைத் தொடர்ந்து தக்கவைக்க முடியும் என்றும், கடந்த காலங்களில், வாக்காளர்களைப் பதிவு செய்து அவர்களின் பெயர்களைச் சேகரிப்பதன் மூலம் குறிப்பிட்ட தொகுதியில் வெற்றி வாய்ப்பைக் கணிக்க முடிந்ததாகவும் அப்துல் ரவூஃப் யுசோ தெரிவித்துள்ளார்.

ஆனால், 18 முதல் 20 வயதுடைய இளைஞர்கள் மட்டுமின்றி, இதுவரை வாக்களிக்காத அனைத்து வயது வந்தவர்களும் புதிய வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதால் நிலைமை மாறியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →