Oct 16, 2026
Thisaigal NewsYouTube

நெகிரி செம்பிலான் அரசியலமைப்பு நெருக்கடி: மாநில ஆட்சியாளர், மந்திரி பெசாரிடம் கடும் அதிருப்தி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நெகிரி செம்பிலான் அரசியலமைப்பு நெருக்கடி: மாநில ஆட்சியாளர், மந்திரி பெசாரிடம் கடும் அதிருப்தி

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர், மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிமிடம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலில் எடுக்கப்பட்ட காணொளியில், தம்மை இனி மாநில ஆட்சியாளராக ஏற்கவில்லை எனக் குறிப்பிட்டு ஆட்சியாளர்களின் முத்திரைக் காப்பாளருக்குக் கடிதம் அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக மந்திரி பெசார் மற்றும் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மீது அவர் அதிருப்தி தெரிவிப்பது பதிவாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, முன்னாள் உண்டாங் தலைவர்கள் துவாங்கு முஹ்ரிஸைப் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்ததாக மந்திரி பெசார் கூறியிருந்தார். எனினும், மாநில ஆட்சியாளரை நீக்கவோ, பதவி காலியானதாக அறிவிக்கவோ மந்திரி பெசாருக்கும் ஆட்சிக்குழுவுக்கும் தனிப்பட்ட அதிகாரம் இல்லை என்று சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பத்துப் பேரின் நியமனங்களையும் துவாங்கு முஹ்ரிஸ் ரத்து செய்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா தேர்தல்: பிகேஆர் 9 தொகுதிகளில் போட்டி; 24ஆம் தேதி வேட்பாளர்கள் அறிவிப்பு

மலாக்கா தேர்தல்: பிகேஆர் 9 தொகுதிகளில் போட்டி; 24ஆம் தேதி வேட்பாளர்கள் அறிவிப்பு

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரம்: அரசியலாக்க வேண்டாம் – ஆட்சியாளர்களின் உத்தரவுக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவு

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரம்: அரசியலாக்க வேண்டாம் – ஆட்சியாளர்களின் உத்தரவுக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவு

நெகிரி செம்பிலானின் 17ஆவது ஜெலுபு உண்டாங்-ஆக அஸ்ரின் கைரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நெகிரி செம்பிலானின் 17ஆவது ஜெலுபு உண்டாங்-ஆக அஸ்ரின் கைரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பெரிக்காத்தான் நேஷனல் மீதான தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு

பெரிக்காத்தான் நேஷனல் மீதான தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு

மலாய் ஆட்சியாளர்கள் மாநாட்டில் துவாங்கு முஹ்ரிஸ் பங்கேற்கமாட்டார்

மலாய் ஆட்சியாளர்கள் மாநாட்டில் துவாங்கு முஹ்ரிஸ் பங்கேற்கமாட்டார்

தேர்தலில் பிஎச்சின் முதலமைசச்ர் வேட்பாளராக அட்லி ஸாஹாரியை நியமிக்க வேண்டும்: அமானா தலைவர் வலியுறுத்தல்

தேர்தலில் பிஎச்சின் முதலமைசச்ர் வேட்பாளராக அட்லி ஸாஹாரியை நியமிக்க வேண்டும்: அமானா தலைவர் வலியுறுத்தல்