Oct 20, 2026
Thisaigal NewsYouTube

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பதிவு ரத்து - ஆர்ஓஎஸ் அதிரடி அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பதிவு ரத்து - ஆர்ஓஎஸ் அதிரடி அறிவிப்பு

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பதிவை, சங்கங்களின் பதிவாளர் அலுவலகமான ஆர்ஓஎஸ் ரத்து செய்ததாக அறிவித்துள்ளது.

பதிவு ரத்து செய்வதற்கான காரணங்கள் குறித்து ஏற்கெனவே அனுப்பப்பட்ட அறிவிப்புக்கு, கூட்டணி அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி, சங்கங்கள் சட்டம் 1966, துணைப்பிரிவு 13(2)-ன் கீழ், பெரிக்காத்தான் கூட்டணிக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கி ஆர்ஓஎஸ் அறிவிப்பு அனுப்பியது.

இதற்குப் பதிலாக, அக்டோபர் 12-ஆம் தேதி பெரிக்காத்தான் கூட்டணி தனது விளக்கத்தைச் சமர்ப்பித்தது.

என்றாலும், அந்த ஆவணங்களையும் விளக்கங்களையும் ஆய்வு செய்ததில், கூட்டணியின் பதிவைத் தொடர்ந்து வைத்திருக்கப் போதுமான காரணங்கள் இல்லை என ஆர்ஓஎஸ் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, சங்கங்களின் சட்டம் 1966 துணைப்பிரிவு 13(1)(c)(iv)-ன் கீழ் பதிவை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டதாக இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பதிவு செய்யப்பட்ட அனைத்து அமைப்புகளும் சங்கங்களின் சட்டம்1966 சட்டத்தையும் தங்களது அமைப்பு விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என ஆர்ஓஎஸ் வலியுறுத்தியுள்ளது.

அதேவேளையில் அமைப்புகளின் நிர்வாகம் வெளிப்படையாகவும் பொறுப்புடனும் நடைபெறுவதை உறுதி செய்ய, சட்டத்தின்படி தனது கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? தலைவர் மன்றமே முடிவெடுக்கும்-  ஃபாஹ்மி கூறுகிறார்

மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? தலைவர் மன்றமே முடிவெடுக்கும்- ஃபாஹ்மி கூறுகிறார்

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரம்: மந்திரி பெசார் உட்பட 17 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மனுத் தாக்கல்

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரம்: மந்திரி பெசார் உட்பட 17 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மனுத் தாக்கல்

மலாக்கா தேர்தலில் வாக்காளர் வருகையைப் பதிவு செய்ய புதிய தொழில்நுட்பம்: சோதனை முயற்சியில் தேர்தல் ஆணையம்

மலாக்கா தேர்தலில் வாக்காளர் வருகையைப் பதிவு செய்ய புதிய தொழில்நுட்பம்: சோதனை முயற்சியில் தேர்தல் ஆணையம்

உண்டி18, தானியங்கி வாக்காளர் பதிவு பாரிசானுக்கு சவாலாக இருக்கும்: மலாக்கா மந்திரி பெசார் கணிப்பு

உண்டி18, தானியங்கி வாக்காளர் பதிவு பாரிசானுக்கு சவாலாக இருக்கும்: மலாக்கா மந்திரி பெசார் கணிப்பு

மலாக்கா இளைஞர் பிரிவுத் தலைவர் ஜெஃப்ரி சஃப்ரி பெர்சாத்துவிலிருந்து விலகல்

மலாக்கா இளைஞர் பிரிவுத் தலைவர் ஜெஃப்ரி சஃப்ரி பெர்சாத்துவிலிருந்து விலகல்

மலாக்கா தேர்தல்: அக்டோபர் 28-ம் தேதி வேட்பாளர் பட்டியலை அறிவிக்கிறது பாரிசான்

மலாக்கா தேர்தல்: அக்டோபர் 28-ம் தேதி வேட்பாளர் பட்டியலை அறிவிக்கிறது பாரிசான்