மலாக்கா மாநிலத் தேர்தலில் அனுபவம் வாய்ந்தவர்கள், இளைஞர்கள், பெண்கள் எனப் பல இனங்களைச் சேர்ந்த வேட்பாளர்களைக் களமிறக்க பிகேஆர் கட்சி திட்டமிட்டுள்ளதாக அதன் உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
சமூகத்துக்குச் சேவையாற்றும் திறனும், போட்டியிடும் சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றியைத் தேடித் தரும் தகுதியும் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.
குறிப்பாக, கட்சிக்கு ஆதரவு குறைவாக உள்ள தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிப்பது, பிகேஆர் மற்றும் பக்காத்தான் ஹராப்பானின் நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதி என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலாக்கா மாநிலத் தேர்தலில் பிகேஆர் ஒன்பது தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. வேட்பாளர் பட்டியலைக் கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வரும் அக்டோபர் 24ஆம் தேதி அறிவிப்பார். நவம்பர் 14ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அக்டோபர் 31ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலும், நவம்பர் 10ஆம் தேதி முன்கூட்டிய வாக்குப்பதிவும் நடைபெறும்.








