நெகிரி செம்பிலானில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இல்லாததால், முதலீடுகள் மற்றும் மாநில அரசின் ஒப்புதல் தேவைப்படும் வர்த்தக நடவடிக்கைகள் தாமதமடைவதாக முன்னாள் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஹாருன் தெரிவித்துள்ளார்.
சிரம்பானில் நடைபெற்ற நெகிரி செம்பிலான் ஜசெக மாநில மாநாட்டில் பேசிய அவர், புதிய அரசாங்கம் பொறுப்பேற்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகியும் மாநில நிர்வாகம் வழக்கம்போல் செயல்பட முடியவில்லை என்றும், முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள், சொத்து முகவர்கள் முக்கிய முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகவும் கூறினார்.
கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி, பதவிப் பிரமாணத்தை மீறியதாகக் கூறி மாநிலத்தின் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களும் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், 2027ஆம் ஆண்டுக்கான மாநில வரவு செலவுத் திட்டத்தை ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இல்லாமலேயே மாநிலச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும் என்று மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் தெரிவித்துள்ளார்.








