நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரத்தை அரசியலாக்காமல், சட்டப்பூர்வ வழிமுறைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என்ற மலாய் ஆட்சியாளர்கள் மாநாட்டின் உத்தரவுக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அரச குடும்பத்தின் மாண்பைப் பாதுகாப்பதுடன், நெகிரி செம்பிலான் அரசியலமைப்புக்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விவகாரத்தைக் கையாள அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமானா கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் முஜாஹிட் யூசோப் ராவா, அரச குடும்ப விவகாரங்களில் தலையிடுவதையும் அவற்றை அரசியலாக்குவதையும் தவிர்க்க வேண்டும் என்ற ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டைத் தாம் முழுமையாக ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.








