Oct 21, 2026
Thisaigal NewsYouTube

நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 10 பேர்: நியமன ரத்து முடிவை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மனு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 10 பேர்: நியமன ரத்து முடிவை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மனு

நெகிரி செம்பிலான் மாநில அரசின் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள், தங்களது நியமனங்களை ரத்து செய்த யாங் டி-பெர்துவான் பெசாரின் முடிவை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், நெகிரி செம்பிலான் மாநில அரசியலமைப்பின் தொடர்புடைய சட்டப்பிரிவுகளை விளக்கி முடிவெடுக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர். இது தொடர்பாக அக்டோபர் 5-ஆம் தேதி சிரம்பான் உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்திருந்தனர்.

மந்திரி பெசாரின் ஆலோசனையின்றி ஆட்சிக்குழு உறுப்பினர்களின் நியமனத்தை யாங் டி-பெர்துவான் பெசார் ரத்து செய்ய முடியுமா என்பதும், கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி வெளியிடப்பட்ட நியமன ரத்து அறிவிப்பு சட்டப்படி செல்லுபடியாகுமா என்பதும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ள முக்கியக் கேள்விகளாகும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
பெரிக்காத்தான் நேஷனலின் புதிய அரசியல் வியூகம்: ஐபிஆர் மூலம் புத்துயிர் பெறும் வாய்ப்பு

பெரிக்காத்தான் நேஷனலின் புதிய அரசியல் வியூகம்: ஐபிஆர் மூலம் புத்துயிர் பெறும் வாய்ப்பு

பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பாக்கார் ஹம்ஸா பெர்சாத்து கட்சியிலிருந்து இடைநீக்கம்

பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பாக்கார் ஹம்ஸா பெர்சாத்து கட்சியிலிருந்து இடைநீக்கம்

மலாக்கா தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கட்சிகள் பாஸ் சின்னத்தில் போட்டியிடலாம் – சனூசி

மலாக்கா தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கட்சிகள் பாஸ் சின்னத்தில் போட்டியிடலாம் – சனூசி

கூட்டணிக் கட்சிகளை நியாயமாக நடத்த வேண்டும்; பெரிக்காத்தான் நேஷனல் பதிவு ரத்து ஒரு பாடம் – முகைதீன்

கூட்டணிக் கட்சிகளை நியாயமாக நடத்த வேண்டும்; பெரிக்காத்தான் நேஷனல் பதிவு ரத்து ஒரு பாடம் – முகைதீன்

பெரிக்காத்தான் நேஷனல் மக்கள் ஆதரவு அலையை எளிதில் அணைக்க முடியாது – அஹ்மாட் சம்சூரி

பெரிக்காத்தான் நேஷனல் மக்கள் ஆதரவு அலையை எளிதில் அணைக்க முடியாது – அஹ்மாட் சம்சூரி

பாஸ் தலைமை மீதே பெரிக்காத்தான் பதிவுப் ரத்து பழியைச் சுமத்தும் பெர்சத்து

பாஸ் தலைமை மீதே பெரிக்காத்தான் பதிவுப் ரத்து பழியைச் சுமத்தும் பெர்சத்து