பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பதிவு ரத்து செய்யப்பட்டது, கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் தலைவர்கள் நியாயமாக நடத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் பாடம் என அதன் முன்னாள் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
கூட்டணியின் தலைமைத்துவம் கட்சி அமைப்புச் சட்டத்தையும், 1966-ஆம் ஆண்டு சங்கங்கள் சட்டத்தையும் பின்பற்ற வேண்டும் என்று பெர்சத்து தலைவருமான அவர் வலியுறுத்தினார்.
ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது குழுவின் நலனுக்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, கூட்டணியின் அடிப்படை நோக்கங்களிலிருந்து விலகிச் செல்லக்கூடாது என்றும் அவர் கூறினார்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பதிவு ரத்து செய்யப்பட்ட முடிவு தமக்கு வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்ட முகைதீன், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இன்று இரவு பெர்சத்து அரசியல் பிரிவின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்றார்.








