மலாக்கா மாநிலத் தேர்தலில் 8 முதல் 9 தொகுதிகளில் போட்டியிட பிகேஆர் இலக்கு வைத்துள்ளதாகவும், பக்காத்தான் ஹராப்பான் தனது வேட்பாளர்களை வரும் அக்டோபர் 18ஆம் தேதி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதமரின் அரசியல் செயலாளர் அஸ்மான் அபிடின் தெரிவித்துள்ளார்.
மாச்சாப், ஆயர் கெரோ, ரெம்பியா ஆகியவை பிகேஆர் குறிவைக்கும் தொகுதிகளில் அடங்கும் என்று அவர் கூறினார். வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் இறுதி முடிவை கட்சியின் உயர்மட்டத் தலைமை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
பாயா ரும்புட் தொகுதியில் தாம் போட்டியிடக்கூடும் என்ற ஊகத்துக்குப் பதிலளித்த அஸ்மான், கட்சித் தலைமை எந்தத் தொகுதியை ஒதுக்கினாலும் போட்டியிடத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
மலாக்கா மாநிலத் தேர்தல் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 31ஆம் தேதியும், முன்கூட்டிய வாக்குப்பதிவு நவம்பர் 10ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.








