Oct 12, 2026
Thisaigal NewsYouTube

தேர்தலில் பிஎச்சின் முதலமைசச்ர் வேட்பாளராக அட்லி ஸாஹாரியை நியமிக்க வேண்டும்: அமானா தலைவர் வலியுறுத்தல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தேர்தலில் பிஎச்சின் முதலமைசச்ர் வேட்பாளராக அட்லி ஸாஹாரியை நியமிக்க வேண்டும்: அமானா தலைவர் வலியுறுத்தல்

மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் முதலமைச்சர் வேட்பாளராக அமானா கட்சியின் துணைத் தலைவர் அட்லி ஸாஹாரியை நியமிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர்களில் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

2018 முதல் 2020 வரை மலாக்கா முதலமைச்சராகவும், 2022 டிசம்பர் முதல் மத்திய தற்காப்புத்துறை துணை அமைச்சராகவும் அட்லி ஸாஹாரி பணியாற்றிய அனுபவம் அவருக்குச் சாதகமாக இருப்பதாக, கூட்டரசுப் பிரதேச அமானா துணைத் தலைவர் ஹயாதுல் காமில் தெரிவித்துள்ளார்.

அட்லி ஸாஹாரியை முதலமைச்சர் வேட்பாளராக முன்கூட்டியே அறிவிப்பது, நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்த செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்றும், வேட்பாளர் தேர்வில் நிலவும் அதிகாரப் போட்டி குறித்த ஊகங்களைத் தவிர்க்க உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மலாக்கா மாநிலத் தேர்தல் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பக்காத்தான் ஹராப்பானின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவாதம் எழுந்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →