பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பதிவை சங்கப் பதிவுத்துறையான ஆர்ஓஎஸ் (ROS) ரத்து செய்ததற்கு, பாஸ் தலைமையிலான கூட்டணித் தலைமைதான் காரணம் என்று பெர்சத்து குற்றஞ்சாட்டியுள்ளது.
பெர்சத்து பொதுச் செயலாளர் முஹமட் அஸ்மின் அலி, கூறுகையில் அந்தக் கூட்டணியின் தலைமைத்துவம், 1966-ஆம் ஆண்டு சங்கச் சட்டத்தையும், கூட்டணியின் அரசியலமைப்பையும் மீறியிருப்பதை இந்த முடிவு நிரூபிப்பதாகக் கூறினார்.
கடந்த ஜூலை 16-ஆம் தேதி நடைபெற்ற பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் பங்கேற்கவும், கருத்துத் தெரிவிக்கவும், வாக்களிக்கவும் பெர்சத்துக்கு உரிய உரிமை மறுக்கப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார். இது கூட்டணியின் அரசியலமைப்புப் பிரிவு 7.1-ஐ மீறும் கடுமையான செயலாகும் என்றும் அஸ்மின் அலி தெரிவித்தார்.
பெரிக்காத்தான் நேஷனலின் தலைமைக்கு அனுப்பப்பட்ட காரணம் கோரும் கடிதத்திற்கு அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்திகரமாக இல்லாததால், அதன் பதிவை ரத்து செய்வதாக ஆர்ோஎஸ் இன்று அறிவித்தது தொடர்பில் எதிர்வினையாற்றுகையில் அஸ்மின் அலி இதனைத் தெரிவித்தார்.








