Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா தேர்தல்: பிகேஆர் 9 தொகுதிகளில் போட்டி; 24ஆம் தேதி வேட்பாளர்கள் அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா தேர்தல்: பிகேஆர் 9 தொகுதிகளில் போட்டி; 24ஆம் தேதி வேட்பாளர்கள் அறிவிப்பு

மலாக்கா மாநிலத் தேர்தலில் பிகேஆர் ஒன்பது தொகுதிகளில் போட்டியிடுகிறது. பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் வேட்பாளர்கள் வரும் 24ஆம் தேதி அறிவிக்கப்படுவர் என்று பிகேஆர் பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் ஃபுஸியா சால்லே தெரிவித்துள்ளார்.

அன்றிரவு 8 மணிக்கு மலாக்கா Hang Jebat விளையாட்டரங்க வாகன நிறுத்துமிடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வேட்பாளர்களை அறிவிப்பார்.

தேர்தல் தயாரிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிற கட்சிகளுடன் அதிகாரப்பூர்வ அரசியல் ஒத்துழைப்பு எதுவும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என்றும், தேர்தலில் உதவ விரும்பும் தரப்பினரின் ஆதரவை பிகேஆர் வரவேற்கும் என்றும் ஃபுஸியா சால்லே கூறியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →