Oct 13, 2026
Thisaigal NewsYouTube

பெரிக்காத்தான் நேஷனல் மீதான தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெரிக்காத்தான் நேஷனல் மீதான தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் செயல்பாடுகளை முடக்கிய பதிவுத்துறையான ஆர்ஓஎஸ் உத்தரவை எதிர்த்து, நீதிமன்ற மறுஆய்வு நடவடிக்கையைத் தொடங்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இருப்பினும், அந்த உத்தரவை இடைக்காலமாக நிறுத்திவைக்கக் கோரிய மனுவை நீதிபதி அஸிஸான் முஹமட் அர்ஷாட் நிராகரித்தார். இதற்கிடையே, இடைக்காலத் தடை கோரும் மனு மீதான இருதரப்பு விசாரணை அக்டோபர் 22ஆம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட தடையால், மலாக்கா மாநிலத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அக்கூட்டணி தெரிவித்துள்ளது. மலாக்கா தேர்தல் வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 31ஆம் தேதியும், வாக்குப்பதிவு நவம்பர் 14ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →