Oct 19, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? தலைவர் மன்றமே முடிவெடுக்கும்- ஃபாஹ்மி கூறுகிறார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? தலைவர் மன்றமே முடிவெடுக்கும்-  ஃபாஹ்மி கூறுகிறார்

மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் முதலமைச்சர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மலாக்கா முதலமைச்சர் அட்லி ஸாஹாரியை அந்தப் பொறுப்புக்குப் பரிந்துரைப்பது குறித்து, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவர் மன்றம் இன்னும் விவாதிக்கவில்லை என்றும், இது தொடர்பாகத் தலைவர் மன்றமே முடிவெடுக்கும் என்றும் அவர் கூறினார். இருப்பினும், மலாக்கா மாநிலத்தில் முதலமைச்சராக அட்லி சேவையாற்றிய அனுபவம் இருப்பதை ஃபாஹ்மி ஒப்புக் கொண்டார்.

அட்லி ஸாஹாரியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று கடந்த அக்டோபர் 12ஆம் தேதி, அமானா கட்சியின் கூட்டரசுப் பிரதேசத் துணைத் தலைவர் ஹாயாதுல் காமில் வலியுறுத்தியிருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் ஃபாஹ்மி இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே மலாக்கா தேர்தலில் பெர்சாத்து கட்சியுடனான ஒத்துழைப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அதனை பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் இயக்குநர் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரியிடம் கேட்குமாறு ஃபாஹ்மி தெரிவித்துள்ளார்.

மலாக்கா மாநிலத் தேர்தல் வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரம்: மந்திரி பெசார் உட்பட 17 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மனுத் தாக்கல்

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரம்: மந்திரி பெசார் உட்பட 17 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மனுத் தாக்கல்

மலாக்கா தேர்தலில் வாக்காளர் வருகையைப் பதிவு செய்ய புதிய தொழில்நுட்பம்: சோதனை முயற்சியில் தேர்தல் ஆணையம்

மலாக்கா தேர்தலில் வாக்காளர் வருகையைப் பதிவு செய்ய புதிய தொழில்நுட்பம்: சோதனை முயற்சியில் தேர்தல் ஆணையம்

உண்டி18, தானியங்கி வாக்காளர் பதிவு பாரிசானுக்கு சவாலாக இருக்கும்: மலாக்கா மந்திரி பெசார் கணிப்பு

உண்டி18, தானியங்கி வாக்காளர் பதிவு பாரிசானுக்கு சவாலாக இருக்கும்: மலாக்கா மந்திரி பெசார் கணிப்பு

மலாக்கா இளைஞர் பிரிவுத் தலைவர் ஜெஃப்ரி சஃப்ரி பெர்சாத்துவிலிருந்து விலகல்

மலாக்கா இளைஞர் பிரிவுத் தலைவர் ஜெஃப்ரி சஃப்ரி பெர்சாத்துவிலிருந்து விலகல்

மலாக்கா தேர்தல்: அக்டோபர் 28-ம் தேதி வேட்பாளர் பட்டியலை அறிவிக்கிறது பாரிசான்

மலாக்கா தேர்தல்: அக்டோபர் 28-ம் தேதி வேட்பாளர் பட்டியலை அறிவிக்கிறது பாரிசான்

மலாக்கா தேர்தலில் அனுபவசாலிகள், இளைஞர்கள், பெண்களுக்கு வாய்ப்பு! – அமிருடின்

மலாக்கா தேர்தலில் அனுபவசாலிகள், இளைஞர்கள், பெண்களுக்கு வாய்ப்பு! – அமிருடின்