Oct 18, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா இளைஞர் பிரிவுத் தலைவர் ஜெஃப்ரி சஃப்ரி பெர்சாத்துவிலிருந்து விலகல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா இளைஞர் பிரிவுத் தலைவர் ஜெஃப்ரி சஃப்ரி பெர்சாத்துவிலிருந்து விலகல்

மலாக்கா பெர்சாத்து கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் ஜெஃப்ரி சஃப்ரி, கட்சியின் தலைமைத்துவம் மற்றும் எதிர்கால அரசியல் திசை குறித்த நம்பிக்கையை இழந்ததால் கட்சியிலிருந்து விலகி வாவாசான் கட்சியில் இணைந்துள்ளார்.

ஜாசின் மாவட்ட பெர்சாத்து பிரிவின் தலைவராகவும் இருந்த ஜெஃப்ரி சஃப்ரி, கட்சியின் உயர்மட்டத் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே தனது முடிவுக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, பெர்சாத்து கட்சி பக்காத்தான் ஹாராப்பானுடன் அரசியல் ஒத்துழைப்பில் ஈடுபடக்கூடும் என்ற தகவல்கள் தொடர்பாகத் தலைமைத்துவத்துடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் அரசியல் போராட்டங்கள் கொள்கைகள், நேர்மை மற்றும் மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும், அதிகாரப் போட்டிகள் அல்லது குறுகிய அரசியல் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது என்றும் ஜெஃப்ரி சஃப்ரி வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →