Oct 14, 2026
Thisaigal NewsYouTube

நெகிரி செம்பிலானின் 17ஆவது ஜெலுபு உண்டாங்-ஆக அஸ்ரின் கைரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நெகிரி செம்பிலானின் 17ஆவது ஜெலுபு உண்டாங்-ஆக அஸ்ரின் கைரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 17ஆவது ஜெலுபு உண்டாங்-ஆக அஸ்ரின் கைரியை, மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இன்று ஶ்ரீ மெனாந்தியில் உள்ள இஸ்தானா பெசாரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில அரச குடும்பத்தினர் மற்றும் மாநிலச் செயலாளர் ஸாஃபிர் இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

51 வயதான அஸ்ரின் கைரி, இதற்கு முன்பு அந்தப் பதவியில் இருந்த மாரோஃப் மாட் ரஷாட் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய உண்டாங்-ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பஹாங் டெலிகோம் மலேசியா நிறுவனத்தில் மூத்த பொது மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.

ஜெலுபு உண்டாங் தொடர்பான விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்காக, இன்று தொடங்கும் ஆட்சியாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று துவாங்கு முஹ்ரிஸ் முடிவு செய்திருந்ததாகவும் முன்னதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →