Jul 21, 2026
Thisaigal NewsYouTube
மகா இராஜராஜேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம்
ஆன்மிகம்

மகா இராஜராஜேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம்

Share:

சிரம்பான், மே 17-

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாபர் பகுதியில் நெடுங்காலமாக வீற்றிருந்து, தன்னை நாடி வருகின்ற அடியவர்களுக்கு அருள்மழை பொழிகின்ற இராஜ ராஜேஸ்வரர் ஆலயத்தில் சத்ரு சம்ஹார அஷ்ட கால வைரவர் மற்றும் திருப்பள்ளியறை சுவாமிகளுக்கான மகா கும்பாபிஷேகம் வரும் மே 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மணி 10.01 க்கும் 11.01 க்கும் இடைப்பட்ட நேரத்தில் வெகுசிறப்பாக நடைபெறவிருக்கிறது.

தமிழ்நாடு திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோவில் ஆதின ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீ மத் சிவாக்கர தேசிக சுவாமிகள் தலைமையில் தமிழ் திருமுறையில் இந்த மகா கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது.

இந்த மகா கும்பாபிஷேகத்தில் பொது மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு, இராஜராஜேஸ்வரர் பெருமான் திருவருளை பெற்று உய்யுமாறு ஆலய நிர்வாகம் சார்பில் சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.

உலகில் மிக சக்தி வாய்ந்த சத்ரு சம்ஹார அஷ்ட கால வைரவர் இரண்டு இடங்களில் மட்டுமே வீற்றிருக்கிறார். ஒன்று, தமிழ்நாடு திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திலும், மற்றொன்று, மலேசியாவில் சிரம்பான் தாமான் துவாங்கு ஜாபர் இராஜ ராஜேஸ்வரர் ஆலயத்திலும் குடிகொண்டு இருக்கிறார்.

இந்த மகா கும்பாபிஷேகத்தில் பொது மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு, மகா .இராஜராஜேஸ்வரர் பெருமான் திருவருளை பெற்று உய்யுமாறு ஆலய நிர்வாகம் சார்பில் சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.

Related News

திருவாசகம் ஓதுதல், ஜோகூரில் நடைபெறுகிறது

திருவாசகம் ஓதுதல், ஜோகூரில் நடைபெறுகிறது

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

சிரம்பான் ஸ்ரீமஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வந்து சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீமஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வந்து சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வரும் சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வரும் சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

  சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்