Aug 7, 2026
Thisaigal NewsYouTube
திருவாசகம் ஓதுதல், ஜோகூரில் நடைபெறுகிறது
ஆன்மிகம்

திருவாசகம் ஓதுதல், ஜோகூரில் நடைபெறுகிறது

Share:

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 12/7/2026 காலை மணி 7.30 am முதல் தொடங்கி மாலை மணி 3.30pm வரையில் மலேசிய சிவனடியார் திருச்சபை, மலேசிய நால்வர் மன்றம், ஜொகூர் மாநில நால்வர் மன்றம் மற்றும் அருள்மிகு அமுத ஈஸ்வரர் ஆலயம் கோத்தா தங்கி ஜொகூர் என்ற திருக்கோயிலும் இணைந்து, நமது திருமுறைகளில் ஒன்றான , திருவாசகத்தை முழுவதுமாக ஓதுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.

நமது சமயக்குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகப் பெருமான் பாட , இறைவன் கைப்பட எழுதப்பட்ட 658 பாடல்களை கொண்ட திருவாசகம் என்னும் ஞான பணுவலை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஓதுவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

மாநில அளவிலான ஆறாவது திருவாசக முற்றோதல் ஜொகூர் மாநிலத்தில், கோத்தா திங்கி வட்டாரத்தில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஆதலால் சுற்றுவட்டார பொதுமக்கள், அடியார்கள், பக்தர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை நழுவ விடாது அனைவரும் இறைவனின் திருவருளையும் குருவருளையும் பெறுமாறு அன்புடன் ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்வில் காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும்.

இத்திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்வதற்காக கிழே கொடுக்கப்பட்டுள்ள அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related News

பகான் டாலாம் உக்கிர காளியம்மன் ஆலய நில விவகாரத்திற்கு சுமூகத் தீர்வு: சட்டமன்ற உறுப்பினர் குமரனின் அதிரடி நடவடிக்கை!

பகான் டாலாம் உக்கிர காளியம்மன் ஆலய நில விவகாரத்திற்கு சுமூகத் தீர்வு: சட்டமன்ற உறுப்பினர் குமரனின் அதிரடி நடவடிக்கை!

முருகன் தேசிய  மாநாட்டில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்

முருகன் தேசிய மாநாட்டில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்

தேசிய திருமுருக மாநாடு அரசியல் சார்பற்ற ஆன்மிக எழுச்சி: டத்தோ அ. சிவநேசன் பெருமிதம்

தேசிய திருமுருக மாநாடு அரசியல் சார்பற்ற ஆன்மிக எழுச்சி: டத்தோ அ. சிவநேசன் பெருமிதம்

செனாய் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் திருவிழா கோலாகலம்!

செனாய் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் திருவிழா கோலாகலம்!

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

சிரம்பான் ஸ்ரீமஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வந்து சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீமஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வந்து சப்த இரத ஊர்வலம்