Jul 21, 2026
Thisaigal NewsYouTube
ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு
ஆன்மிகம்

ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு

Share:

செனாவாங், பிப்ரவரி.14-

நெகிரி செம்பிலான், செனாவாங், தாமான் துவாங்கு ஜாஃபாரில் வீற்றிருக்கும் ஸ்ரீ மஹா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான திருக்கோயிலில் நாளை பிப்ரவரி 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரதோஷப் பூஜைகள் மற்றும் மஹா சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு வெகுசிறப்பாக நடைபெறவிருக்கின்றன.

மஹா சிவராத்திரியையொட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.31 மணிக்குத் தொடங்கி விக்னேஷ்வரர் வழிபாட்டுடன் பிரதோஷப் பூஜைகள் அனைத்தும் நடைபெறவிருக்கின்றன.

திருக்கயிலாய பரம்பரை கந்தப்பரம்பரை திருஞானசம்பந்தர் ஆதீனம் அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் தலைமையில் பூஜைகள் நடைபெறும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

நாளை இரவு 7.01 மணிக்குத் தொடங்கி, மறுநாள் அதிகாலை வரை மஹா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகள் மிக விமரிசையாக நடைபெறவுள்ளன.

சிவராத்திரியின் இரண்டாம் கால பூஜையில், சரியாக நள்ளிரவு 12.01 மணிக்கு, தனிச்சிறப்பான கைலாய அலங்காரத்துடன் லிங்கோத்பவருக்கு மஹா அபிஷேகம் நடைபெறும். பொதுவாக மூலஸ்தானத்திற்குப் பின்புறம் வீற்றிருக்கும் லிங்கோத்பவருக்கு, இக்கோயிலில் இத்தகைய சிறப்பான அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுவது மிகவும் தனித்துவமான விசேஷமாகும்.

இந்தச் சிவராத்திரி பூஜைகள் அனைத்தும் சுவாமிகள் தலைமையில் சாஸ்திரோக்தமாக நடைபெறவுள்ளன. இந்த புண்ணிய நிகழ்வில் சுற்றுவட்டாரப் பொதுமக்களும் சிவபக்தர்களும் திரளாகக் கலந்துகொண்டு, எம்பெருமான் சிவபெருமானின் திருவருளைப் பெற்றுச் செல்லுமாறு தேவஸ்தான நிர்வாகச் சபை அன்புடன் அழைப்பு விடுக்கின்றது.

Related News

திருவாசகம் ஓதுதல், ஜோகூரில் நடைபெறுகிறது

திருவாசகம் ஓதுதல், ஜோகூரில் நடைபெறுகிறது

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

சிரம்பான் ஸ்ரீமஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வந்து சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீமஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வந்து சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வரும் சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வரும் சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

  சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்