Sep 22, 2026
Thisaigal NewsYouTube
இராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் திருமுறை அருளாசியுரை
ஆன்மிகம்

இராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் திருமுறை அருளாசியுரை

Share:

சிரம்பான் ,செப்டம்பர் 01-

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி சனிக்கிழமை இரவு மணி 8.00 க்கு சிரம்பான், துவாங்கு ஜாபர்- ரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் திருமுறை அருளாசி உரை நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

இந்நிகழ்விற்கு தமிழ்நாடு, திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீமத் சிவாக்கர தேசிய சுவாமிகள் அவர்கள், சிறப்பு வருகை புரிந்து, திருமுறை அருளாசி உரை நிகழ்த்தவிருக்கிறார் என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக மாலை 6 மணிக்கு நிந்திய பூஜை மற்றும் விஷேச பூஜை நடைபெறும். விஷேச பூஜைகளிலும் தொடர்ந்து நடைபெறும் சுவாமிகளின் அருளாசி உரை நிகழ்விலும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளும்படி ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related News