Jul 21, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு தைப்பூச விழா: அமைதியுடனும் ஒற்றுமையுடனும் கொண்டாடுவது அனைவரின் கடமை - ஆர்.எஸ்.என் ராயர் வலியுறுத்தல்
ஆன்மிகம்

பினாங்கு தைப்பூச விழா: அமைதியுடனும் ஒற்றுமையுடனும் கொண்டாடுவது அனைவரின் கடமை - ஆர்.எஸ்.என் ராயர் வலியுறுத்தல்

Share:

ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.01-

உலக அளவில் புகழ்பெற்ற பினாங்கு தைப்பூச விழாவைப் பாதுகாத்து மேம்படுத்துவது பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு மட்டும் பொறுப்பு அல்ல. அது, பொதுமக்களாகிய நம் அனைவருக்கும் உள்ள கூட்டுப் பொறுப்பாகும் என்று அந்த வாரியத்தின் தலைவர் ஆர்.எஸ்.என் ராயர் தெரிவித்தார்.

இன்று பினாங்கு, தண்ணீர்மலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தின் 240-ஆம் ஆண்டு தைப்பூச விழாவை முன்னிட்டு, அங்கு வருகை புரிந்த மாநில முதலமைச்சர் சாவ் கோன் இயோவை வரவேற்றுப் பேசிய போது ராயர் இதனைத் தெரிவித்தார்.

இந்தத் தைப்பூச விழாவினை எவ்விதப் பிரச்சினையுமின்றி அமைதியான முறையில் மேன்மேலும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதே வாரியத்தின் முக்கிய நோக்கமாகும் ராயர் தமது உரையில் குறிப்பிட்டார்.

'யாமிருக்க பயமேன்' என்ற சொல்லுக்கேற்ப, தண்ணீர்மலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் மிகுந்த சக்தி வாய்ந்தவர்.

இந்தத் தைப்பூச விழா மிகச் சிறப்பான முறையில் நடைபெறுவதற்குப் பினாங்கு மாநில முதலமைச்சர் சாவ் கோன் இயோவ், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் மற்றும் தொழிலதிபர்கள் பலரும் பெரும் ஆதரவை வழங்கியுள்ளனர். அவர்களுக்குத் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ராயர் கூறினார்.

Related News

திருவாசகம் ஓதுதல், ஜோகூரில் நடைபெறுகிறது

திருவாசகம் ஓதுதல், ஜோகூரில் நடைபெறுகிறது

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

சிரம்பான் ஸ்ரீமஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வந்து சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீமஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வந்து சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வரும் சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வரும் சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

  சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்