Apr 20, 2026
Thisaigal NewsYouTube
மகா இராஜராஜேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம்
ஆன்மிகம்

மகா இராஜராஜேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம்

Share:

சிரம்பான், மே 10-

சிரம்பான், தாமான் துவான்கு ஜாபர் பகுதியில் நெடுங்காலமாக வீற்றிருந்து, தன்னை நாடி வருகின்ற அடியவர்களுக்கு அருள்மழை பொழிகின்ற எல்லா வல்ல பெரிய நாயகி அம்பிகை உடனுறை இராஜ ராஜேஸ்வரர் ஆலயத்தில் சத்ரு சம்ஹார அஷ்ட கால வைரவர் மற்றும் திருப்பள்ளியறை சுவாமிகளுக்கான மகா கும்பாபிஷேகம் வரும் மே 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மணி 10.01 க்கும் 11.01 க்கும் இடைப்பட்ட நேரத்தில் வெகுசிறப்பாக நடைபெறவிருக்கிறது.

தமிழ்நாடு திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோவில் ஆதின ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீ மத் சிவாக்கர தேசிக சுவாமிகள் தலைமையில் தமிழ் திருமுறையில் இந்த மகா கும்பாபிஷேகம் நடைபெறவிருப்பதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உலகில் மிக சக்தி வாய்ந்த சத்ரு சம்ஹார அஷ்ட கால வைரவர் இரண்டு இடங்களில் மட்டுமே வீற்றிருக்கிறார். ஒன்று, தமிழ்நாடு திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திலும், மற்றொன்று, மலேசியாவில் சிரம்பான் தாமான் துவான்கு ஜாபர் இராஜ ராஜேஸ்வரர் ஆலயத்திலும் குடிகொண்டு இருக்கிறார்.

இந்த மகா கும்பாபிஷேகத்தில் பொது மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு, மகா .இராஜராஜேஸ்வரர் பெருமான் திருவருளை பெற்று உய்யுமாறு ஆலய நிர்வாகம் சார்பில் சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த வைரவர் சன்னதி, ஸ்ரீமத் சிவாக்கர தேசிய சுவாமிகள் மற்றும் திருவண்ணாமலை, தமிழ்திருமுறை சிவாச்சாரியார் ஆகியோரின் ஆலோசனை பேரில் கட்டப்பட்டுள்ளது. ஆலய பூஜைகளும் மேற்கண்ட ஆன்றோர்களின் ஆலோசனையின் பேரிலே நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

வழிபாட்டுத் தலங்களை இழிவுபடுத்துவதா?" - ‘Kuil Haram’ சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைக்க DAPSY அதிரடி கோரிக்கை

வழிபாட்டுத் தலங்களை இழிவுபடுத்துவதா?" - ‘Kuil Haram’ சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைக்க DAPSY அதிரடி கோரிக்கை

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற புக்கிட் மெர்தாஜாம் முனீஸ்வரர் ஆலய ஆண்டு விழா

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற புக்கிட் மெர்தாஜாம் முனீஸ்வரர் ஆலய ஆண்டு விழா

செனாவாங்கில் சிவபுராணம் பாராயண நிகழ்வு

செனாவாங்கில் சிவபுராணம் பாராயண நிகழ்வு