Sep 22, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போ தைப்பூசம்: 30 ஆண்டுகளாகத் தொடரும் பேரா மாநில இந்தியப் போலீஸ் அதிகாரிகளின் மகத்தான அன்னதானச் சேவை
ஆன்மிகம்

ஈப்போ தைப்பூசம்: 30 ஆண்டுகளாகத் தொடரும் பேரா மாநில இந்தியப் போலீஸ் அதிகாரிகளின் மகத்தான அன்னதானச் சேவை

Share:

ஈப்போ, பிப்ரவரி.02-

ஈப்போ, கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பேரா மாநிலத்தைச் சேர்ந்த இந்தியப் போலீஸ் அதிகாரிகள் பக்தர்களுக்குப் பசியாற்றும் உயரிய சமூகப் பணியை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நற்பணி குறித்து அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும், கோலாகங்சார் மாவட்டப் போலீஸ் துணைத் தலைவருமான சூப்ரிடெண்டன் சரளநாதன் துரைசாமி கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளாகத் தொய்வின்றி இந்த அன்னதானச் சேவை வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

முருகப் பெருமானை தரிசிக்க வந்த பக்தர்களுக்குக் குளிர்பானங்கள் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கி, அவர்களின் களைப்பைப் போக்குவதே இந்தச் சேவையின் நோக்கம் என சூப்ரிடெண்டன் சரளநாதன் குறிப்பிட்டார்.

Related News