Jul 21, 2026
Thisaigal NewsYouTube
ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய ஆடிப்புரத்திருவிழா – பூச்சொரிதல் விழா
ஆன்மிகம்

ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய ஆடிப்புரத்திருவிழா – பூச்சொரிதல் விழா

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 06-

நாட்டின் தாய்க்கோயிலான கோலாலம்பூர், ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் ஆடிப்புரத் திருவிழா மற்றும் பூச்சொரிதல் விழா 10 ஆம் ஆம் நாள் உற்சவம், நாளை ஆகஸ்ட் 7 ஆம் தேதி புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெறவிருக்கிறது.

கோலாலம்பூர், ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜாவின் ஆதரவுடன் நடைபெறும் இப்பூச்சொரிதல் விழாவையொட்டி நாளை புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு ஸ்ரீ கோட்டுமலை கணேசர் கோவிலிருந்து பூத்தட்டுகள் ஏந்தி ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலை நோக்கி புறப்படுதல் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

இப்பூச்சொரி விழாவில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு அம்பாலுக்கு மலர் அபிஷேகம் செய்து அவரின் அனுகிரகத்தை பெறுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார் இவ்விழா ஏற்பாட்டுக்குழு பொறுப்பாளரான புவான்ஸ்ரீ மல்லிகா நடராஜா.

இவ்விழாவில் பெண்கள் திரளாக வருகை தந்து, அன்னை ஸ்ரீ மகாமாரியம்மனின் திருவருளை பெற்று, பேரின்ப பெருவாழ்வு பெற்றுய்யுறுமாறு புவான்ஸ்ரீ மல்லிகா நடராஜா கேட்டுக்கொள்கிறார்.

புவான்ஸ்ரீ மல்லிகா நடராஜா,
பூச்சொரி விழா ஏற்பாட்டுக்குழு பொறுப்பாளர்

Related News

திருவாசகம் ஓதுதல், ஜோகூரில் நடைபெறுகிறது

திருவாசகம் ஓதுதல், ஜோகூரில் நடைபெறுகிறது

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

சிரம்பான் ஸ்ரீமஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வந்து சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீமஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வந்து சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வரும் சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வரும் சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

  சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்