Aug 11, 2026
Thisaigal NewsYouTube
திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா
ஆன்மிகம்

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

Share:

எதிர் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 19/5/2026 காலை மணி 7.30 முதல் தொடங்கி மாலை மணி 3.00 வரையில் மலேசிய சிவனடியார் திருச்சபை, மலேசிய நால்வர் மன்றம், மற்றும் இந்து தேவஸ்தான சபா ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயம் சிரம்பான் நெகிரி செம்பிலான் திருக்கோயிலும் இணைந்து,

நமது திருமுறைகளில் ஒன்றான , திருவாசகத்தை முழுதுமாக முற்றும் ஓதுதல் எனும் ஞான வேள்வியை ஓதுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.

நமது சமயக்குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகப் பெருமான் பாட , இறைவன் கைப்பட எழுதப்பட்ட 658 பாடல்களை கொண்ட திருவாசகம் என்னும் ஞான பணுவலை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஓதுவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

மாநில அளவிலான இரண்டாவது திருவாசக முற்றோதலாக இது நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆதலால் பொதுமக்கள், அடியார்கள், பக்தர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை நழுவ விடாது அனைவரும் இறைவனின் திருவருளையும் குருவருளையும் பெறுமாறு அன்புடன் ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்வில் காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படவுள்ளது.

மேலும், இத்திருவாசக முற்றோதல் நிகழ்ச்சிக்கு தலைநகர் கோலாலும்பூர் மற்றும் சிலாங்கூரில் இருந்து பேருந்து வசதி செய்து தரப்படுகிறது. ஆர்வமுள்ள பொதுமக்கள் திரையில் காணும் அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Related News