Jul 21, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பட்டாணி தைப்பூசத் திருவிழா: 36-ஆவது ஆண்டாகக் கோலமூடா மாவட்ட போலீஸ் துறையின் தண்ணீர் பந்தல் சேவை
ஆன்மிகம்

சுங்கை பட்டாணி தைப்பூசத் திருவிழா: 36-ஆவது ஆண்டாகக் கோலமூடா மாவட்ட போலீஸ் துறையின் தண்ணீர் பந்தல் சேவை

Share:

சுங்கை பட்டாணி, பிப்ரவரி.03-

ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசத் திருவிழாவின் போது முருகன் ஆலயங்களில் பக்தர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதோடு மட்டுமின்றி, போலீஸ் துறையில் பணியாற்றும் இந்திய அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் ஒன்றிணைந்து தண்ணீர் பந்தல் அமைத்து பக்தர்களின் தாகத்தைத் தணிப்பதில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.

அந்த வகையில், சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க 108-ஆவது தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, கோலமூடா மாவட்ட போலீஸ் துறையைச் சேர்ந்த இந்தியக் காவலர்களும், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளும் ஒன்றிணைந்து 36-ஆவது ஆண்டாகத் தண்ணீர் பந்தல் அமைத்துச் சேவை புரிந்தனர்.

இச்சேவை குறித்துக் கருத்துரைத்த கோலமூடா மாவட்ட போலீஸ் துறையின் துணைத் தலைவர் Supt. சரவணன் சண்முகம், இந்தாண்டு தைப்பூசத் திருவிழா எந்தவோர் அசம்பாவிதங்களுமின்றி மிகவும் அமைதியாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்பட்டது குறித்துத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

இப்பணி வெறும் தாகம் தீர்ப்பது மட்டுமல்லாமல், காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்தது என சரவணன் சண்முகம் தனது உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

Related News

திருவாசகம் ஓதுதல், ஜோகூரில் நடைபெறுகிறது

திருவாசகம் ஓதுதல், ஜோகூரில் நடைபெறுகிறது

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

சிரம்பான் ஸ்ரீமஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வந்து சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீமஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வந்து சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வரும் சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வரும் சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

  சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்