Oct 19, 2025
Thisaigal NewsYouTube
சாலையோர கடையில் மோதி பரபரப்பு
விளையாட்டு

சாலையோர கடையில் மோதி பரபரப்பு

Share:

போலீஸ் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தியதாக நம்பப்படும் அராஜகப் பேர்வழி ஒருவர் , உணவகம் ஒன்றின் சாலையோரத்தில் போடப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் நாற்காலிகள், மேஜைகள் ஆகியவற்றை மோதி, சேதப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் கோலக்கிள்ளான், ராஜா மூடா மூசா, ஜாலான் பிங்கிர் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபொங் தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை புத்தாண்டையொட்டி சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயப் பேர்வழிகளுக்கு எதிராக போலீாசார் தொடங்கிய சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக ஏசிபி சா ஹூங் ஃபொங் குறிப்பிட்டார்.

Related News