Aug 7, 2026
Thisaigal NewsYouTube
ஜிம்னாஸ்டிக்ஸ் பதக்க வாய்ப்பை நூலிழையில் இழந்த ஷாருல் ஐமி
விளையாட்டு

ஜிம்னாஸ்டிக்ஸ் பதக்க வாய்ப்பை நூலிழையில் இழந்த ஷாருல் ஐமி

Share:

2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் வால்ட் இறுதிப் போட்டியில், மலேசியாவின் தேசிய கலைநய ஜிம்னாஸ்டிக் வீரர் முகம்மது ஷாருல் ஐமி சைப்ரஸ் வீரர் நியோபிடோஸ் கிரியாகோவுடன் 13.733 புள்ளிகளைச் சமமாகப் பெற்ற போதிலும், டை-பிரேக் விதிமுறை காரணமாக வெண்கலப் பதக்கத்தை நழுவவிட்டார்.

ஒற்றைத் தாவுதலில் அதிகப் புள்ளிகள் பெற்றவர் என்ற விதியின் அடிப்படையில் சைப்ரஸ் வீரர் மூன்றாவது இடத்தைப் பிடித்ததால், ஷாருல் ஐமி நான்காம் இடத்தைப் பெற்று பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை மிக அருகில் இழந்தார். இதன் மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கலைநய ஜிம்னாஸ்டிக்கில் மலேசியாவின் பதக்கத் தாகத்தைத் தீர்க்கும் வாய்ப்பு நூலிழையில் நழுவிப்போனது.

Related News