Sep 21, 2026
Thisaigal NewsYouTube
புதிய பயிற்சியாளர் அலோன்சோவை ஈர்த்த ஜோவா பெட்ரோ
விளையாட்டு

புதிய பயிற்சியாளர் அலோன்சோவை ஈர்த்த ஜோவா பெட்ரோ

Share:

பிரேஸில் உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்காத ஏமாற்றத்தைத் தாண்டி, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உறுதியுடன் இருப்பதாகச் செல்சியா அணியின் முன்னணி வீரர் ஜோவா பெட்ரோ தெரிவித்துள்ளார்.

சிட்னியில் நடைபெற்ற வெஸ்ட் டேர்ன் சிட்னி வான்டரர்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், மாற்று வீரராகக் களமிறங்கிய அவர் வெறும் ஒன்பது நிமிடங்களில் ஹாட்ரிக் கோல் அடித்து புதிய பயிற்சியாளர் சபி அலோன்சோவின் பாராட்டுக்களைப் பெற்றார்.

கடந்த சீசனில் 20 கோல்களை அடித்து ரசிகர்களின் மனதை வென்ற அவர், அலோன்சோவின் வழிகாட்டுதலின் கீழ் விளையாடுவது தனக்கு மிகுந்த சுதந்திரத்தைத் தருவதாகவும், அணியை உச்சத்திற்குக் கொண்டு செல்ல உழைப்பதாகவும் கூறியுள்ளார்.

Related News