செபாங் பன்னாட்டுச் சுற்றுவட்டாரத்தில் பார்முலா 1 பந்தயம் மீண்டும் மலேசியாவிற்குத் திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான உரிமக் கட்டடங்களை பஹ்ரைன் நாடு ஏற்கும் என்று செபாங் பன்னாட்டுச் சுற்றுவட்டார நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மலேசியாவில் மீண்டும் எஃப்1 பந்தயத்தைக் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியில், நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில் பஹ்ரைனின் ஆதரவு பெற்றுத் தரப்பட்டுள்ளது மோட்டார்ஸ்பீட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் விதமாக அமையும் இந்த பிரம்மாண்ட நிகழ்வு, மலேசியாவை உலக அரங்கில் மீண்டும் ஒரு முக்கிய விளையாட்டு மையமாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








