Sep 20, 2026
Thisaigal NewsYouTube
ஆசியான் விளையாட்டுப் போட்டியில் மலேசியாவிற்கு முதல் பதக்கம் - கராத்தே பிரிவில் கே. தேவேந்திரனுக்கு வெண்கலப் பதக்கம்
விளையாட்டு

ஆசியான் விளையாட்டுப் போட்டியில் மலேசியாவிற்கு முதல் பதக்கம் - கராத்தே பிரிவில் கே. தேவேந்திரனுக்கு வெண்கலப் பதக்கம்

Share:

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஐச்சி-நகோயா ஆசியான் விளையாட்டுப் போட்டியில் மலேசியா தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளது.

55 கிலோவுக்குக் குறைவான ஆடவர் குமிதே பிரிவில் மலேசிய கராத்தே வீரர் கே. தேவேந்திரன் 9-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

தோயோஹாஷி நகரில் இன்று நடைபெற்ற போட்டியில் தேவேந்திரன், Thevendran, 6 யுசோ மற்றும் ஒரு இப்போட்டியின் புள்ளியைப் பெற்று தனது வெற்றியை உறுதி செய்தார்.

இதனிடையே ஆடவர் ஹாக்கி போட்டியில், மலேசிய அணி 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. மலேசிய அணி சார்பில் ஃபைஸால் சாரி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

மேலும், நோர்ஷாஃபிக் சுமான்ட்ரி, அஸிமுடின் ஷாகிர் கமாருடின், அஸ்ராய் அய்ஸாட் அபு கமால் மற்றும் ஃபையிஸ் ஹெல்மி ஜாலி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து மலேசியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இந்நிலையில், அடுத்த குருப் ஆட்டத்தில் மலேசிய அணி செவ்வாய்க்கிழமை ஓமானை எதிர்கொள்கிறது.

Related News